உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முன் ஜாமின் மனு இன்று விசாரணை மாஜி வெளிநாடு தப்பி செல்ல திட்டம்?

முன் ஜாமின் மனு இன்று விசாரணை மாஜி வெளிநாடு தப்பி செல்ல திட்டம்?

கரூர்: நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின், முன் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. முன் ஜாமின் கிடைக்காத பட்சத்தில், அவர் வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.கரூர், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர் கொடுத்த புகார்படி, போலியான ஆவணங்கள் தயாரித்து, 22 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்து கொண்டதாக யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது கடந்த, 9ல் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கில், தன்னை கைது செய்து விடாமல் இருக்க முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலருமான விஜயபாஸ்கர், முன் ஜாமின் கேட்டு கடந்த, 12ல் மாவட்ட முதன்மை அமர்வு தலைமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதுதொடர்பான விசாரணை கடந்த, 15, 19, 21 ஆகிய தேதிகளில் நடந்தது. கடந்த, 21ல் நடந்த விசாரணையின் போது, நீதிபதி சண்முகசுந்தரம் முன் ஜாமின் மீதான, வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தார்.எனவே, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முன் ஜாமின் வழங்கப்படுமா அல்லது தள்ளுபடி செய்யப்படுமா என இன்று தெரிய வரும். அ.தி.மு.க.,வை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., ஒருவரின் தயவில், வெளிமாநிலங்களில் தங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், இன்று முன் ஜாமின் கிடைக்காத பட்சத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வெளிநாடு தப்பி செல்லவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.இது குறித்து கரூர் அ.தி.மு.க., முக்கிய நிர்வாகி கூறுகையில், ' விஜயபாஸ்கரை வழக்கில் சிக்க வைக்க, தி.மு.க., பிரமுகர் திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார். அதனால் தான் அவர் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் வெளிநாடு தப்பி செல்ல உள்ளதாக, தி.மு.க.,வினர் தகவல் பரப்புகின்றனர். அவர் சட்டப்படி வழக்கை சந்திக்க உள்ளார். அவர் இல்லாததால், மாவட்ட கட்சி பணியில் எவ்வித தொய்வும் இல்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை