உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாக்கடை கால்வாய் பகுதியில் தடுப்புசுவர்: பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு

சாக்கடை கால்வாய் பகுதியில் தடுப்புசுவர்: பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு

கரூர்;கரூர் அருகே, சாக்கடை கால்வாய் பகுதியில், தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரத்தினம் சாலையில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் உள்ளது. இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷன் சாலை வழியாக செல்லும் சாக்கடை கால்வாய் பகுதியில், இரண்டு பக்கமும் தடுப்பு சுவர்கள் இல்லை. மேலும், அந்த சாலையில் இரவு நேரத்தில், மின் விளக்குகள் சரிவர எரிவது இல்லை. கரூர் நகரம் மற்றும் வெங்கமேடு பகுதிகளில் இருந்து, ரயில்வே ஸ்டேஷனு க்கு சாக்கடை கால்வாய் உள்ள, பகுதி வழியாக பொதுமக்கள் செல்கின்றனர்.மேலும், அந்த சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்களும் செல்கின்றன. சாக்கடை கால்வாயின், இரண்டு பக்கமும் தடுப்பு சுவர்கள் இல்லாததால், டூவீலர்களில் செல்லும் பொதுமக்கள், இரவு நேரத்தில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து காயமடைகின்றனர்.எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள, சாக்கடை கால்வாயின் இரண்டு பக்கமும் தடுப்பு சுவர்கள் அமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை