உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்

அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்

குளித்தலை;குளித்தலை அரசு கலைக்கல்லுாரி மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடத்தியது.கல்லுாரி முதல்வர் அன்பரசு (பொ) தலைமை வகித்தார். சத்தியமங்கலம் பஞ்., தலைவர் பாப்பாத்தி முகாமை துவக்கி வைத்தார். இதையடுத்து, 36 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவர் பூமிநாதன், ரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.மகளிர் மருத்துவர் மரகதம் மாணவிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி ரத்த வங்கி மருத்துவர் தீபா, அரசு தலைமை மாவட்ட மருத்துவமனை மக்கள் ஆலோசகர் சுஜாதா மற்றும் ஊழியர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை