| ADDED : ஜூன் 05, 2024 06:30 AM
கரூர்: கரூர், எம்.குமாராசாமி பொறியியல் கல்லுாரியில், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது.இதில், காங்., ஜோதிமணி, அ.தி.மு.க., தங்க வேல், பா.ஜ., செந்தில்நாதன் ஆகியோர் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்., வேட்பாளர் ஜோதிமணி முன்னிலையில் இருந்தார். வேடசந்துார், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை ஆகிய சட்டசபை தொகுதிகளில், ஜோதிமணிக்கு அதிக ஓட்டுக்கள் பதிவானது. இறுதியாக, 1.66 லட்சம் ஓட்டு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து ஓட்டு எண்ணும் மையத்தின் வெளியில், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.