உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேதமடைந்த சாக்கடை கால்வாய் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சேதமடைந்த சாக்கடை கால்வாய் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர்: கரூரில், சாக்கடை கால்வாயின் மேல் பகுதி சேதம் அடைந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.கரூர் பழைய அரசு டவுன் மருத்துமனை சாலை, மாநகராட்சி அலுவலகம் பின்புறம் சில மாதங்களுக்கு முன், சாக்கடை கால்வாய் மேல் பகுதியில் சிறுபாலம் கட்டப்பட்டது.அந்த பாலத்தின், மேல் பகுதி கடந்த சில நாட்களுக்கு முன் சேதம் அடைந்தது. கான்கிரீட் இரும்பு கம்பிகள் வெளியே தெரி-கிறது. இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் மாநகராட்சி நிர்-வாகத்திடம் புகார் செய்த பிறகும், நடவடிக்கை எடுக்கப்பட-வில்லை.இதனால், அப்பகுதியில் வசிப்போர் வாகனங்களில் செல்ல முடி-யவில்லை. எனவே, மாநகராட்சி அலுவலகம் பின் பகுதியில், சேதம் அடைந்த சிறுபாலத்தின் மேல் பகுதியை சரி செய்ய, நட-வடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்