கரூர்:மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் நேற்று மதியம், 12:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 26,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 61, 558 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு தண்ணீர் வரத்து, 49, 693 கன அடியாக சரிந்தது. அதில் டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 48,073 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 800 கன அடி தண்ணீரும், கீழ் கட்டளை வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,150 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 1,012 கன அடியாக குறைந்தது. அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 300 கன அடியில் இருந்து, 883 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 88.69 அடியாக இருந்தது.