உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர்;தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் வட்ட கிளை-2 சார்பில், செயலாளர் முருகேஷ் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும், 21 மாத நிலுவை தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் ஆகியவற்றை வழங்க வேண்டும், அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் அன்பழகன், செயலாளர் பொன் ஜெயராம், பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்பட, பலர் பங்கேற்றனர்.* குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அரசு ஊழியர் சங்க கல்வித்துறை வட்ட கிளை தலைவர் பாண்டிகண்ணன் தலைமை வைத்தார். மருத்துவத்துறை வட்ட கிளை செயலாளர் பரிமனம் முன்னிலை வைத்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை மாவட்ட துணைதலைவர் துணை தாசில்தார் வைரப்பெருமாள், நகராட்சிதுறை மாவட்ட துணைத் தலைவர் அறிவழகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வராணி, மற்றும் அனைத்து அரசு துறை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ