கரூர் : கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் விஸ்வ நாதபுரி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ், 56; இவரது வீட்டுக்கு வெளியே கடந்த, 29 ல் இரவில், அதே பகுதியை சேர்ந்த வின் சென்ட், ஜெகன், ஜெரால்டு ஆகியோர், குடி போதையில் சத்தம் போட்டு கொண்டிருந்தனர்.அப்போது, வீட்டில் இருந்து வெளியே வந்த ஜார்ஜ், மூன்று பேரையும் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த வின்சென்ட் உள்பட, மூன்று பேரும் ஜார்ஜை கட்டையால் அடித்துள்ளனர். அதில், ஜார்ஜ்க்கு காயம் ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஜார்ஜ் கொடுத்த புகாரின்படி வின்சென்ட் உள்பட, மூன்று பேர் மீது பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.வாலிபருக்கு கத்திக்குத்து3 பேர் மீது வழக்குப்பதிவுகுளித்தலை, ஜூன் 2-குளித்தலை அடுத்த கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., கோவக்குளம் குடித்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 25. இவருக்கும், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அமிர்தானந்தம், 30, என்பவருக்கும், கடந்த வாரம், கோவக்குளத்தில் உள்ள நுாலகத்தை பூட்டுவது தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.இந்நிலையில், கடந்த, 30ல் மஞ்சமேடு பகுதியில் உள்ள டீக்கடையில் அமிர்தானந்தம், இவரது நண்பர்கள் அதே ஊரை சேர்ந்த கோபி, சுதாகர் ஆகியோர் நின்றிருந்தனர். அப்போது, அங்கு வந்த மணிகண்டனுக்கும், அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அமிர்தானந்தம் மறைத்து வைத்திருந்த கத்தியால், வாலிபர் மணிகண்டன் முதுகில் குத்தினார். மணிகண்டன் கொடுத்த புகார்படி, அமிர்தானந்தம், கோபி, சுதாகர் ஆகிய மூவர் மீதும், மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.