உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலி

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலி

அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் அருகே, அடையாளம் தெரியாத கார் மோதி டூவீலரில் சென்றவர் உயிரிழந்தார்.அரவக்குறிச்சி அருகே நஞ்சைகாளக்குறிச்சியை சேர்ந்தவர் கதிர்வேல், 58. இவர் கடந்த மே, 31ம் தேதி இரவு காசிபாளையத்திலிருந்து, நஞ்சைகாளக்குறிச்சி செல்லும் சாலையில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். நஞ்சைகாளக்குறிச்சி அருகே சென்றபோது, எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார், கதிர்வேல் ஒட்டிச் சென்ற டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.இதில் தலையில் பலத்த காயமடைந்த கதிர்வேலை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். கதிர்வேல் மகன் பாஸ்கரன் கொடுத்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை