உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

கரூர்: 'முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்ய, செப்., 9 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளிகள், பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, 5 பிரிவுகளில், 27 விளையாட்டுக்கள், 53 வகைகளில் நடத்தப்படுகிறது. 12 வயது முதல், 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும். 17 வயது முதல், 25 வயது வரை கல்லுாரி மாணவர்களுக்கும், 15 வயது முதல், 35 வரை பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம். இதற்கான முன் பதிவு செய்ய கால அவகாசம் வரும், செப்.,9 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. https://sdat.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும்.மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் மொபைல் எண், 74017 03493-, ஆடுகளம் தகவல் தொடர்பு மைய மொபைல் எண், 95140 00777 ஆகிவற்றில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை