மேலும் செய்திகள்
டூவீலரிலிருந்து விழுந்தவர் பலி
02-Sep-2024
குளித்தலை: குளித்தலை அடுத்த தொண்டமாங்கிணம் பஞ்., சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன், 35; விவசாய தொழிலாளி. இவர் தனது, 'டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி' டூவீலரில், கடந்த, 30 மதியம், குளித்தலையில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். மீண்டும் இரவு, 7:00 மணியளவில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். குளித்தலை - மணப்பாறை நெடுஞ்-சாலை, சிவாயம் பிரிவு ரோடு அருகே சென்றுகொண்டிருந்த-போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்-துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரன், நேற்று முன்தினம் அதிகாலை, உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சாந்தி, 30, கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரித்து வரு-கின்றனர்.
02-Sep-2024