உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விவசாயிக்கு இழப்பீடு வழங்க விவசாய சங்கம் கோரிக்கை

விவசாயிக்கு இழப்பீடு வழங்க விவசாய சங்கம் கோரிக்கை

கரூர்:கரூர் அருகே, உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயி ராஜாவுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி தெரிவித்தார்.கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசலிடம், நேற்று மாலை கோரிக்கை மனு அளித்த, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்டம், தென்னிலையில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடக்கிறது. அதில், அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ராஜாவுக்கு, உரிய இழப்பீடு மற்றும் ஆவணங்கள் தரப்படவில்லை.இதனால், விவசாயி ராஜா கடந்த, 10 நாட்களாக, தென்னிலையில் உள்ள தோட்டத்தில், உண்ணாவிரதம் இருந்து வருகிறார். எனவே, விவசாயி ராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், விவசாயிகளை திரட்டி கரூர் கலெக்டர் அலுவலகம் முன், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி