உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உங்களைத் தேடி, உங்கள் ஊரில் மண்மங்கலத்தில் ஆய்வு

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் மண்மங்கலத்தில் ஆய்வு

கரூர்;கரூர் மண்மங்கலத்தில், உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தில், கலெக்டர் தங்கவேல் கள ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அவர், கூறியதாவது:ஆண்டாங்கோவில் மேல்பாகம் பஞ்., கோவிந்தம்பாளையம் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், துாய்மை பணியாளர்கள் குறித்த நேரத்தில் வீடு, வீடாக சென்று மட்கும், மட்காத குப்பைகளை தரம் பிரித்து பெற்றுக் கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் உள்ள மக்களிடம், அவர்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.பொதியம்பள்ளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின், பால் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்து, தினசரி பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள அறுவுறுத்தப்பட்டது. பொதுமக்களின் மனுக்களின் மீது, தொடர்புடைய அலுவலர்கள் சார்பில் விரைந்து உரிய தீர்வு காணப்படும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை