உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குழாய் பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

குழாய் பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

கரூர்: கரூரில், குடிநீர் குழாய் பராமரிப்புக்காக தோண்டப்பட்ட குழி திறந்த நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கரூர், காமராஜ் தினசரி மார்க்கெட் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன் குழாய் உடைந்து பல மணி நேரம் தண்ணீர் வீணாக சென்றது. இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் உடைந்த குழாயை, குழி தோண்டி பராமரிப்பு வேலையில் ஈடுபட்டனர். ஆனால், பணியை முழுமையாக முடிக்காமல் விட்டு சென்று விட்டனர். இந்நிலையில், மண் சரிவு ஏற்பட்டு குழியின் ஆழம் அதிகரித்து விட்டது. மேலும், அந்த வழியாக அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், காமராஜ் தினசரி மார்க்கெட் அருகே, குழி திறந்த நிலையில் உள்ளதால், அப்பகுதியில் நாள் முழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், குழாய் பராமரிப்பு பணியை விரைவாக முடித்து விட்டு, குழியை சரியாக மூடி, புதிதாக சாலை அமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை