உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

கரூர் : கரூர், காமாட்சி அம்மன் கோவில் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜோதிமணி, 42. இவர் நேற்று முன்தினம் இரவு கணவர் சத்தியமூர்த்தியுடன், டூவீலரில் வெள்ளியணை அருகே, செல்லாண்டிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு டூவீலரில் பின் தொடர்ந்த இரண்டு மர்ம நபர்கள், ஜோதிமணி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து, ஜோதிமணி கொடுத்த புகார்படி, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை