உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கருப்பம்பாளையம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தவிப்பு

கருப்பம்பாளையம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தவிப்பு

கரூர் ஆக. 22-கரூர்-- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, சுக்காலியூர் அருகில் கருப்பம்பாளையம் செல்லும் தார்ச்சாலை உள்ளது. பல ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. கருப்பம்பாளையம், செட்டிபாளையம், அப்பிபாளையம் பகுதிகளில் இருந்து கரூர் நகருக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் சேதமடைந்த சாலைகளில் பயணம் செய்கிறவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். இதனால், கருப்பம்பாளையம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ