உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணர், -ராதை வேடம் குழந்தைகளுக்கு பரிசு

கிருஷ்ணர், -ராதை வேடம் குழந்தைகளுக்கு பரிசு

கரூர் ஆக. 25--கிருஷ்ணர், -ராதை வேடமிட்டு வரும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக, திருக்குறள் பேரவை சார்பில் நிறுவனர் மேலை பழநியப்பன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கை:கரூர் பண்டரிநாதன் பஜனை மடாலயத்தில், கோகுலாஷ்டமி எனும் கிருஷ்ணர் அவதாரத் திருநாள் வரும், 26ல் கொண்டாடப்படுகிறது. 27ல் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடக்கிறது. அன்று மாலை 6:00 மணிக்கு பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர்,- ராதை வேடமிட்டு அழைத்து வந்தால், பரிசு பொருள்கள் வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி