கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம், வளாக அரங்கத்தில் நடந்தது.டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், சித்தலவாய் வாய்க்காலை துார் வாருதல் பணி மேற்கொள்ள மன்ற முன் அனுமதி பெறப்பட்டது. வார்டு எண்-7, மலையப்பகாலனி, வார்டு எண்- 11, வளையர்பாளையம் ஆகிய பகுதிகளில் சின்டெக்ஸ் தொட்டி வைத்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ருக்மணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.