உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கும்பாபிஷேக விழா கோலாகலம்: ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிப்பு

கும்பாபிஷேக விழா கோலாகலம்: ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிப்பு

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சூரியனூர் ஊராட்சி மேலப்பட்டியில், பெரியகாண்டியம்மன், மாறப்ப சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுடன் கூடிய ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கோயில் மேல் உள்ள கலசத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது. கோயிலை சுற்றி திரளாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் கே. என். நேரு, குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், குளித்தலை திமுக ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதேபோல் குளித்தலை அருகே மணத்தட்டை ஊராட்சி எழுநூற்று மங்கலம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஆச்சி அம்மன், காமாட்சி, அம்மன், மதுரை வீரன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா குழுவின் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை