| ADDED : ஜூன் 05, 2024 06:29 AM
கரூர் : கரூர் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாக, அரசு அலுவலர்கள் உறுதிமொழிஏற்றனர்.கரூர் எம்.குமாராசாமி பொறியியல் கல்லுாரி வளாகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. ஓட்டு எண்ணும் பணியில், 358 அரசு அலுவலர்கள் ஈடுபட்டனர். ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் முன்பாக, அப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள், கட்சி முகவர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். ஓட்டு எண்ணிக்கை நடத்தும் தேர்தல் அலுவலர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், எண்ணிக்கை மையத்தில் செயல்படும் அதிகாரிகள் எண்ணிக்கை தொடர்பான விஷயங்களில் ரகசியம் காக்க வேண்டும் எனவும், பொதுவெளியில் எண்ணிக்கை குறித்து தகவல்களை வெளியிடக் கூடாது, மீறினால் ஆறு மாதம் சிறை தண்டனை இருக்கும் என்பதை நான் அறிவேன் என கூறி, அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றனர்.