உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கவுண்டம்பாளையம் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

கவுண்டம்பாளையம் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

கரூர்: கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை கவுண்டம்பாளையம் தொடக்க பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் டவுன் பஞ்., கவுன்சிலர்கள், முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடி கல்வியாளர் என மொத்தம், 24 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதிய தலை-வராக இளமதி, துணைத்தலைவராக பூங்கோதை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மறுகட்டமைப்பு பார்வையாளராக சின்ன ஆண்டாங்கோவில் தொடக்க பள்ளி தலைமையாசிரியர் புவனா முன்னிலையில் தேர்தல் நடந்தது.முன்னாள் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அறிவுமலர் உள்-பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ