உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகப்பேறு தாய்மார்கள் சுயமாகவே இணைய தளத்தில் பதியலாம்

மகப்பேறு தாய்மார்கள் சுயமாகவே இணைய தளத்தில் பதியலாம்

கரூர், மகப்பேறு தாய்மார்கள், சுயமாகவே இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தாய்மார்களும், பேறு காலத்தில் தாய்சேய் ஒருங்கிணைந்த கண்காணிப்பிற்காக இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் அவர்களுக்கு தாய்சேய் நல அடையாள அட்டை எண் வழங்கப்படுகிறது. பதிவு செய்யும் முறை அந்த பகுதியில் பணிபுரியும் கிராம நகர சுகாதார செவிலியர் மூலமாக மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தது.புதிய முறையாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ், மகப்பேறு தாய்மார்கள் சுயமாகவே http://picme.tn.gov.in/picme என்றஇணையதளத்தில் சென்று கர்ப்பத்தினை பதிவு செய்யலாம். இணையதளத்தில் பதிவு செய்வதற்கும் வழிமுறைகளை கற்றுக்கொடுத்து ஏற்பாடு செய்துள்ளது. அரசு ஆரம்பசுகாதார நிலையங்களில் தினமும் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை சென்று பதிவு செய்து கொள்ள முகாம் நடக்கும். புதிய திட்டத்தில் கர்ப்ப காலத்தில் முதல் தவணையாக 4-வது மாதத்தில், 6,000 ரூபாய், -இரண்டாம் தவணையாக குழந்தை பிறந்த 4-வது மாதத்தில், 6,000 ரூபாய்,- மூன்றாவது தவணையாக குழந்தை பிறந்த, 9-வது மாதத்தின் முடிவில், 2,000 ரூபாய், இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும். புதிய திட்டமான பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தில் முதல் குழந்தைக்கு, 5,000 ரூபாய் இரண்டு தவணையாகவும், இரண்டாவது பெண் குழந்தைகளுக்கு, 6,000 ரூபாய் ஒரு தவணையாகவும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ