உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் ம.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

குளித்தலையில் ம.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

குளித்தலை: குளித்தலை, தலைமை தபால் நிலையம் முன் நேற்று, கரூர் மாவட்ட ம.தி.மு.க., சார்பில் மத்-திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆசை சிவா தலைமை வகித்தார். துணை செயலாளரும், குளித்தலை நகராட்சி துணைத் தலைவருமான கணேசன், நகர செயலாளர் சிவேஷ்வர்ஷன், மாவட்ட பொறுப்பாளர்கள் பூமி-நாதன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணித்த மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வில் விலக்கு அளிக்க வலியுறுத்தியும் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, ஆர்ப்பாட்டம் செய்தனர். துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா கண்டன உரையாற்றினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை