உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கந்தம்பாளையத்தில் மருத்துவ பரிசோதனை முகாம்

கந்தம்பாளையத்தில் மருத்துவ பரிசோதனை முகாம்

அரவக்குறிச்சி: நொய்யல் அருகே கந்தம்பாளையத்தில், நேற்று மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.ஓலப்பாளையம், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் குறித்து பரிசோதனை மேற்கொண்டனர். கோடை காலத்தில் பெய்து வரும் மழையால், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல், சளி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் சர்க்கரை தடுப்பு மாத்திரை, ரத்த அழுத்த மாத்திரை, சத்து மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினர். நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி