| ADDED : ஆக 02, 2024 01:50 AM
க.பரமத்தி, 'விவசாயிகள் தினை பயிரிட்டு லாபம் பெறலாம்' என, க.பரமத்தி வேளாண் உதவி இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:ஆடி, புரட்டாசி பட்டம் திணை சாகுபடிக்கு ஏற்ற காலமாக கருதப்படுகிறது. ஒரு ஹெக்டேர் நிலத்தில் அடியுரமாக, 12.5 டன் மக்கிய தொழு உரம் கடைசி உழவின் போது பரப்பி நிலத்தை நன்கு உழ வேண்டும். பயிர் அறுவடைக்குப்பின், நிலத்தை சட்டி கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். வரிசை விதைப்பாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு, 10 கிலோ விதை தேவை; துாவுவதாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு, 12.5 கிலோ விதை தேவை. பயிருக்கு பயிர், பயிர் வரிசைக்கு இடைவெளியாக, 22.5 சென்டிமீட்டர், 7.5 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைப்பு செய்ய வேண்டும்.ஒரு ஹெக்டேர் தேவையான விதையளவிற்கு, 500 மில்லி திரவ உயிர் உரத்தை அசோஸ்பாசை கலந்து நிழலில் உலர்த்தி அதன் பிறகு விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் அசோபாஸை மணல் கலந்து, 25 கிலோ தொழுவரத்துடன் கலந்து துாவ வேண்டும். ஒரு ெஹக்டருக்கு முறையே, 44 கிலோ தழைச்சத்து, 22 கிலோ சாம்பல் சத்து தேவைப்படுகிறது. இந்த பயிரை பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. கதிர்கள் நன்கு காய்ந்து இலைகள் பழுத்தவுடன், அறுவடை செய்து களத்தில் காயவைத்து அடித்து தானியங்களை பிரித்து சுத்தம் செய்ய வேண்டும்.இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு, க.பரமத்தி வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை விவசாயிகள் அணுகலாம்.இவ்வாறு, அதில் குறப்பிடப்பட்டுள்ளது.