உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகன் காதல் திருமணம் செய்ததால் தாய் தற்கொலை;4 பேர் மீது வழக்கு

மகன் காதல் திருமணம் செய்ததால் தாய் தற்கொலை;4 பேர் மீது வழக்கு

குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்.. நச்சலுார் கருப்பணமேடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 55, கூலி தொழிலாளி. இவரது தங்கை மல்லிகா, 54. இவரது மகன் ஹரி பிரசாத் என்பவரும், அதே ஊரை சேர்ந்த பழனிசாமி மகள் மனோரஞ்சிதமும் காதலித்து வந்தனர். இந்நிலையில், மனோரஞ்சிதத்துக்கு அதே ஊரை சேர்ந்த தியாகு என்பவருக்கு கடந்த, 12ல் திருமண ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதற்கிடையில் ஹரிபிரசாத், மனோரஞ்சிதம் இருவரும் வீட்டை விட்டு சென்றனர். இதையறிந்த மனோரஞ்சிதத்தின் தந்தை பழனிசாமி, தாய் ஜோதிமணி, உறவினர்கள் ராஜா, செல்வம் ஆகியோர் ஹரி பிரசாத்தின் தாய் மல்லிகா மற்றும் அவரது உறவினர்களிடம் சென்று, எனது மகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தொந்தரவு செய்தனர்.மேலும் கடந்த, 14 அதிகாலையில் மல்லிகாவிடம் என் மகளை பறி கொடுத்து விட்டு தவிக்கிறோம் என்று கூறி திட்டி உள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மல்லிகா, தன்னுடைய வீட்டில் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து மல்லிகாவின் அண்ணன் பழனிசாமி கொடுத்த புகார்படி, அதே ஊரை சேர்ந்த ஜோதிமணி, 40. அவரது கணவர் பழனிசாமி, ராஜா, செல்வம் ஆகியோர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஜோதிமணியை கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை