உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பழைய பால்கனி சுவர் இடிந்து விழுந்து கணவன், மனைவி காயம்

பழைய பால்கனி சுவர் இடிந்து விழுந்து கணவன், மனைவி காயம்

கரூர்;கரூரில் பழைய கட்டடத்தின், பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் கணவன், மனைவிக்கு காயம் ஏற்பட்டது.தென்காசி பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன், 40; இவரது மனைவி ஷகிரா பானு, 35; இவர்கள் இருவரும், திருப்பூருக்கு செல்ல தென்காசியில் இருந்து, நேற்று காலை கரூர் வந்தனர். பிறகு, கரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, டீ குடித்து விட்டு, சாலையை கடக்க பழைய கட்டடத்தின் கீழ் பகுதியில், நின்று கொண்டிருந்தனர்.அப்போது, பலமாக காற்று வீசியதால் பழைய கட்டடத்தின் பால்கனி சுவர் இடிந்து, சதாம் உசேன், அவரது மனைவி ஷகிரா பானு மீது விழுந்தது. இருவருக்கும் காயம் ஏற்பட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை