உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடம்பவனேஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா

கடம்பவனேஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா

குளித்தலை: குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில், நேற்று முன்-தினம் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அன்று இரவு, யாக சாலையில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பின், சோமஸ்கந்தர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு, சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தினர். அதை தொடர்ந்து, சுவாமிகள் தனித்தனி வாகனத்தில் மின் அலங்காரத்தில், கோவில் வெளி பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக வந்து பக்தர்க-ளுக்கு காட்சியளித்தனர். பொது மக்கள் தேங்காய், வாழைப்பழம் வைத்து பூஜை செய்தனர். பஞ்ச மூர்த்திகள் ஊர்வலத்தில் பக்-தர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிர-சாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி