உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஏமூர் - வெங்ககல்பட்டி சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை

ஏமூர் - வெங்ககல்பட்டி சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை

கரூர், ஏமூர் - வெங்ககல்பட்டி சாலையை சீரமைக்க, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கரூர் - திண்டுக்கல் சாலையில், வெங்ககல்பட்டியில் இருந்து ஏமூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக, கரூரில் இருந்து நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், வெங்ககல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, டூவீலர்களில் ஏராளமானோர் கரூர் நகருக்கு வேலைக்கு செல்கின்றனர்.அப்போது, இரவு நேரத்தில் குண்டும், குழியுமான சாலைகளில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க உள்ளாட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை