மேலும் செய்திகள்
சிறுமிக்கு 'தொல்லை' 3 பேர் மீது போக்சோ
14-Aug-2024
கரூர், ஆக. 24-கரூர் அருகே, பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, மீன் வியாபாரியை, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் கைது செய்தனர்.கரூர் வடிவேல் நகர் எல்.என்.எஸ்., போஸ்ட் பகுதியை சேர்ந்த, ஆறுமுகம் என்பவரது மகன் சந்தோஷ், 29, மீன் வியாபாரி. இவர், 13 வயது எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து, கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் கனகவள்ளி மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, கரூர் மகளிர் போலீசார் சந்தோசை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
14-Aug-2024