உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் பஸ் ஸ்டாண்டில் போலீசார் ரோந்து பணி

கரூர் பஸ் ஸ்டாண்டில் போலீசார் ரோந்து பணி

கரூர்: அ.தி.மு.க., மாஜி அமைச்சரின் உறவுக்கார பெண்ணுக்கு நடந்த சில்மிஷம் காரணமாக, கரூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று மகளிர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.சேலம் நெடுஞ்சாலை நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகள் சுமதி, 53. இவர் கடந்த, 14 இரவு கரூரில் உள்ள முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் சின்னசாமி வீட்டுக்கு சென்று, திருமண பத்திரிக்கை கொடுத்து விட்டு, சேலம் செல்ல கரூர் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார். அப்போது, 35 வயதுடைய வாலிபர் ஒருவர், மது போதையில் சுமதியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்து, சுமதி அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று மாலை கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில், போலீசார் கரூர் பஸ் ஸ்டாண்டில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களிடம், யாராவது தொல்லை கொடுத்தால், பஸ் ஸ்டாண்டில் ரோந்து பணியில் உள்ள போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம் என, இன்ஸ்பெக்டர் சுமதி அறிவுரை வழங்கினார். எஸ்.எஸ்.ஐ.,க்கள் மகாலட்சுமி, தனலட்சுமி மற்றும் மகளிர் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ