உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர் மோதி விபத்து விசைத்தறி பணியாளர் பலி

டூவீலர் மோதி விபத்து விசைத்தறி பணியாளர் பலி

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னபையன், 68; விசைத்தறி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணியளவில், மளிகை பொருட்கள் வாங்க, சேலம் - திருச்-செங்கோடு சாலையில் நடந்துசென்றுள்ளார்.அப்போது, சேலம் மாவட்டம், கண்டர்குலமாணிக்கம் பகு-தியை சேர்ந்த யோகேஷ்வரன், 20, என்பவர் ஓட்டிவந்த டூவீலர் சின்னபையன் மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சின்னபையனுக்கு, சிவகாமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ