உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கரூர், கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி நந்தி பகவானுக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின் மகாதீபாராதனை காட்டப்பட்டது.* வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் காசி விஸ்வநாதர் கோவிலில் நந்தி பகவானுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களாலும், அருகம்புல்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.* புன்னம் சத்திரம் அருகே, புன்னைவனநாதர் கோவிலில் உள்ள, நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பித்து வழிபாடு நடந்தது. சுவாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து கோவிலை வலம் வந்தார்.* நத்தமேட்டில் உள்ள சிவன் கோவில், திருக்காடு துறையில் உள்ள மாதேஸ்வரன் உடனுறை மாதேஸ்வரி கோவில், என்.புகளூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை