உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீட்டை அபகரித்த தி.மு.க., செயலர்: கரூர் எஸ்.பி.,யிடம் உற-வினர் புகார்

வீட்டை அபகரித்த தி.மு.க., செயலர்: கரூர் எஸ்.பி.,யிடம் உற-வினர் புகார்

கரூர்: வீட்டை அபகரித்து விட்டதாக, தி.மு.க., ஒன்றிய செயலர் மீது, அவரது உறவினர் கரூர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.கரூர், சின்ன ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சிவசாமி, 55. இவர் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேட-சந்துாரில் விறகு கடை நடத்தி வருகிறார். இவர், தன் வீட்டை அபகரித்து விட்டதாக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஒன்-றிய தி.மு.க., செயலர் சாமிநாதன் மீது, கரூர் எஸ்.பி., அலுவல-கத்தில் புகார் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் அம்மாள் நகரில், 6,000 சதுர-டியில் வீடு கட்ட வங்கியில் கடன் பெற்று இருந்தேன். வங்கி கடன், 1.50 கோடி உள்பட சொந்த தேவைக்கு, 5 கோடி ரூபாய் தேவைப்பட்டது. இதற்காக, என் உறவினரும், வேட-சந்துார் ஒன்றிய, தி.மு.க., செயலருமான சாமிநாதனிடம் உதவி கேட்டேன். அவர், 1.30 கோடி ரூபாய் அடமான கடனாக தந்தார். பாக்கி பணத்தை பிறகு தருவதாக கூறினார். அவர் வழங்கிய கடனுடன், சொந்த பணத்தை போட்டு வங்கி கடனை அடைத்து விட்டேன். மீதமுள்ள பணத்தை பலமுறை கேட்ட போது, அடமானம் போதாது என்றும், வீட்டை கிரையம் செய்து கொடுத்தால் பணத்தை திரும்ப தந்து விடுகிறேன் என கூறினார்.அதை நம்பி, சாமிநாதன் சொன்ன கம்பெனி பெயரில் கிரையம் செய்து கொடுத்து விட்டேன். அவர் மீதமுள்ள தொகை வழங்க-வில்லை என்பதால், நான் வாங்கிய கடன் திருப்பி தந்து விடு-கிறேன் என தெரிவித்தேன். அதன்படி வாங்கிய கடனில், 70 லட்சம் ரூபாய் அடைத்து விட்டேன். ஜூலை 7 ல், அவருக்கு கொடுக்க வேண்டிய மீதமுள்ள தொகை கொடுக்க சென்றேன். அப்போது, 7 கோடி ரூபாய் கொடுத்தால் கிரையம் ரத்து செய்ய முடியும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார். வீட்டை அபக-ரித்தது மட்டுமின்றி, என் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து வேடசந்துார் ஒன்றிய தி.மு.க., செயலர் சாமிநாதன் கூறுகையில்,'' என் உறவினர் சிவசாமி. குடும்ப பிரச்னை காரண-மாக புகார் அளித் துள்ளார். நாங்கள் பார்த்து கொள்கிறோம்,'' என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ