கரூர்: ஆத்துப்பாளையம் அணையில் இருந்து, பாசனத்-துக்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்-ளது.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்-மட்டம், 24.60 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 67 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமரா-வதி அணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 272 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 284 கன அடியாக இருந்தது. அம-ராவதி ஆற்றில் வினாடிக்கு, 579 கன அடி தண்ணீர் திறக் கப்பட்டுள்ளது. புதிய பாசன வாய்-காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்-பட்டுள்ளது. 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 89 அடியாக இருந்தது.* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 17 ஆயிரத்து, 718 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 19 ஆயிரத்து, 302 கன அடியாக அதிகரித்தது. காவிரி-யாற்றில் சம்பா சாகுபடிக்காக, 17 ஆயிரத்து, 882 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தென்கரை பாசன வாய்க்காலில், கீழ் கட்டளை வாய்க்கால் உள்ளிட்ட, நான்கு வாய்க்கால்களில் வினாடிக்கு, 1,420 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.