உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாநகராட்சி கட்டடத்திற்கு பெத்தாச்சி செட்டியார் பெயர் சூட்ட கோரிக்கை

மாநகராட்சி கட்டடத்திற்கு பெத்தாச்சி செட்டியார் பெயர் சூட்ட கோரிக்கை

கரூர்: கரூர் மாநகராட்சியின் புதிய கட்டடத்துக்கு, பெத்தாச்சி செட்டியார் பெயர் வைக்க வேண்டும் என கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலைபழநியப்பன் தெரிவித்தார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் நகராட்சியின் முதல் தலைவராக இருந்தவர் பெத்தாச்சி செட்டியார்.சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் நகரில், 1889-ல் பெத்தாச்சி செட்டியார் பிறந்த போதிலும், அவரது பெற்றோர் கரூர் வந்து தனது அயராது உழைப்பால், இப்போதைய கரூர் மாவட்டத்தின் ஆண்டிபட்டி கோட்டையின் ஜமீனாக உயர்ந்தவர். இவரது காலத்தில்தான், கரூர் நகராட்சியில் ஏழைகளுக்கான வரிவிதிப்பில் விலக்கு இருந்துள்ளது.கரூர் கல்யாண பசுபதீசுவரர், வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில்களுக்கு பெத்தாட்சி செட்டியார் மேற்கொண்ட திருப்பணிகள் இன்றளவும் பேசப்படுகின்றன. இத்தகைய பெருமைமிக்க அவருக்கு, மாநகராட்சியின் புது கட்டடத்துக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை