உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொன்நகர் சந்திப்பில் நிழற்கூடம்:பொது மக்கள் வலியுறுத்தல்

பொன்நகர் சந்திப்பில் நிழற்கூடம்:பொது மக்கள் வலியுறுத்தல்

கரூர்;கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, பொன்நகர் சந்திப்பில் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.கரூரில் இருந்து கோடங்கிப்பட்டி, திருச்சி பைபாஸ் சாலை, மதுரை பைபாஸ் சாலை, திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம், அரவக்குறிச்சி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், ராயனுார் பொன்நகர் வழியாக சென்று வருகிறது. பொன்நகர் சந்திப்பு பகுதியில் இருந்து தான்தோன்றிமலை, கரூர், ஒத்தையூர் போன்ற பகுதிகளுக்கான சாலைகளும் பிரிந்து செல்கிறது. இந்த சந்திப்பு வழியாக பள்ளி, கல்லுாரி வாகனங்கள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவு சென்று வருகிறது. பொன்நகர் சந்திப்பில் பயணிகளும், மாணவ, மாணவிகள் நின்று செல்லும் வகையில், நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த இடத்தை பார்வையிட்டு, அனைவரின் நலன் கருதி நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ