உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல். ஜி.பி. நகர் கிழக்கு தெருவில், சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பிரம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, வீரபத்திரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பரிவார தெய்வங்களுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளி கூறினார். தொடர்ந்து சுவாமிக்கு துாப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை