உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இழப்பீடு வழங்காததால் மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம்

இழப்பீடு வழங்காததால் மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம்

அரவக்குறிச்சி, ஆண்டிசெட்டிபாளையம் முதல், தென்னிலை கரை தோட்டம் வரை, 110 கே.வி. தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தால் நிறுவப்பட்ட பாதை செல்லும் வழியில், உயர் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு வழங்காததால் மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது.கரூர் மாவட்டம் ஆண்டிசெட்டிபாளையம் முதல், தென்னிலை கரை தோட்டம் வரை 110 கே.வி. தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தால், உயர் மின் கோபுர பாதை அமைக்கப்பட்டது.நிறுவப்பட்ட பாதை செல்லும் வழியில், மின் கோபுரத்திற்கான முழுமையான இழப்பீடு வழங்காமல் உள்ளது.மேலும் நில மதிப்பு நிர்ணயம் செய்யாமலும், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு, பனைமரம், வேப்பமரம், முருங்கை, கிலுவை உயிர்வேலி மற்றும் காய்கறி செடிகளுக்கான இழப்பீடு வழங்கப் படாமல் உள்ளது.மேலும் சட்டவிரோதமாக காவல்துறையை வைத்து பயிர்கள் மற்றும் மரங்களை வெட்ட முயற்சி செய்து வருகின்றனர். அரசு அதிகாரிகளின் போக்கை கண்டித்தும், இழப்பீடு வழங்க வேண்டியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கரூர் மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா, தோட்டத்தில் மூன்றாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர் கூறியதாவது: 110 கேவி தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தால் நிறுவப்பட்ட பாதை செல்லும் வழியில் உயர் மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீடு வழங்காமலும், உயர் மின் கோபுரம் அமைத்ததற்கு பிறகு உங்களுக்கான இழப்பீடு வழங்கப்படும் என, தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு தெரிவித்திருந்தது.ஆனால் இதுவரை வழங்கவில்லை. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு பேச்சுவார்த்தையில், 15 நாட்களுக்குள் இழப்பீடு வழங்குவதாக கூறிய நிலையில், இதுவரை வழங்கவில்லை. தற்போது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை