| ADDED : ஜூலை 03, 2024 11:22 AM
குளித்தலை: குளித்தலையில், அரசு பஸ் மோதி நேர காப்பாளர் அறையின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது.குளித்தலை நகராட்சியின், தற்காலிக பஸ் ஸ்டாண்டில் நிழற்கூடம் அருகில், அரசு பணிமனையின், பஸ் நேரம் காப்பாளர் அறை உள்ளது. பஸ் ஸ்டாண்டின் உள்ளே நிறுத்தப்படும் பஸ்கள், கரூர், மணப்பாறை, தரகம்பட்டி, முசிறிக்கு செல்லும் பஸ்கள் செல்லும் போது, நேரம் காப்பாளர் அறையை கடந்து செல்ல வேண்டும். நேர காப்பாளர் அறையின் கதவு திறந்த நிலையிலும், அதன் மேற்கூரை நீண்டும் உள்ளது.நேற்று காலை, 11:30 மணியளவில் திருச்சியில் இருந்து, கரூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று, நேரம் காப்பாளர் அறை மற்றும் பஸ் ஸ்டாண்டு சுற்றுச்சுவர் மீது மோதியதில் சேதம் ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த நகராட்சி கமிஷனர் நந்தக்குமார், பஸ் ஸ்டாண்டு சுற்றுச்சுவர் சேதம் ஏற்பட்டுள்ளதை, சரி செய்து தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, புதிதாக சுற்றுச்சுவர் கட்டி தருவதாக, போக்குவரத்து நிர்வாகம் கூறியதையடுத்து, அரசு பஸ் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.