உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் கம்பங்களில் தீப்பந்தம்: பொதுமக்கள் நுாதன போராட்டம்

மின் கம்பங்களில் தீப்பந்தம்: பொதுமக்கள் நுாதன போராட்டம்

கரூர்;கரூர் அருகே, இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரியாததால், பொதுமக்கள் தீப்பந்தம் வைத்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்து, நான்காவது வார்டு, வெள்ளாளப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக, மின் கம்பங்களில் விளக்குகள் எரிவது இல்லை. இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும், புலியூர் டவுன் பஞ்., நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நேற்று முன்தினம் இரவு, வெள்ளாளப்பட்டியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்களில் தீப்பந்தங்களை கட்டி, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ