உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் - கோவை பிரிவு சாலையில் போக்குவரத்து போலீசார் தேவை

கரூர் - கோவை பிரிவு சாலையில் போக்குவரத்து போலீசார் தேவை

கரூர் :கரூர் - கோவை பிரிவு சாலையில் கண்காணிக்க, போக்குவரத்து போலீசார் பணியில் அமர்த்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மனோகரா கார்னர் பகுதியில் இருந்து திருக்காம்புலியூர் வரை கோவை சாலையில் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளன. சாலையில் வையாபுரி நகர், 80 அடி ரோடு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பிரிவு சாலை செல்கிறது. பிரிவு சாலை வழியாகவும் அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. பிரதான கோவை சாலையிலிருந்து பிரிவு சாலையில் செல்வதற்காக சாலையை கடக்கும் போது, சில சமயங்களில் விபத்து நடக்கிறது.எனவே, காலை, மாலை நேரங்களில், பிரிவு சாலையில் போக்குவரத்தை கண்காணிக்க போலீசார் பணியில் ஈடுபடுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை