உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தார் லோடு திருடிய ஊழியர் இருவர் கைது

தார் லோடு திருடிய ஊழியர் இருவர் கைது

கரூர் : தென்னிலை அருகே, ஆறு டன் தார் லோடு திருடியதாக, ஊழியர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், மொஞ்சனுார் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 37; கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், க.பரமத்தி அருகே முத்தனம்பாளையத்தில், ஆறு டன் தார் லோடு வைத்திருந்தார். அதை நிறுவனத்தின் மெஷின் ஆப்ரேட்டர் பசுபதி, 34; டிரைவர் கிருஷ்ணமூர்த்தி, 35; ஆகியோர் திருடியுள்ளனர். மதிப்பு மூன்று லட்ச ரூபாய். இதுகுறித்து, அருண்குமார் கொடுத்த புகாரின்படி பசுபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை, தென்னிலை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை