கரூர்: சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில், கட்டுமான பொருட்கள் கொட்டுவதை தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.கரூரில் ஏராளமான ஜவுளி, கொசுவலை, பஸ் பாடி நிறுவனங்கள் உள்ளன. 8,000 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கிறது. லட்சத்-துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் செங்குந்தபுரம், வெங்க-மேடு, காந்தி கிராமம், தான்தோன்றிமலை, சேலம், கோவை, மதுரை ஆகிய பைபாஸ் சாலைகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்-புகள் உள்ளன.தொடர்ந்து பழைய கட்டடங்களை இடித்து, புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டட பணி நடக்கிறது. அங்கு, இடிக்கப்படும் கட்டட கழிவு-களை, அதன் உரிமையாளர்கள் சிலர் புறம்-போக்கு மற்றும் சாலையோரங்களில் கொட்டி விடுகின்றனர். இதனால், போக்குவரத்து நெருக்-கடி ஏற்படுகிறது.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:புதிய கட்டடம் கட்டும் உரிமையாளர்கள், மணல், செங்கல் கொட்டுவது போன்ற அனைத்து தேவைகளுக்கும், எவ்வித தயக்கமின்றி சாலை-களை பயன்படுத்தி வருகின்றனர். சாலையில் மணல் கொட்டுவதால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், தினம் தினம் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். மேலும், சாலை நடுவில் ராட்சத இயந்திரங்கள் மூலம், கட்டடங்களுக்கு கான்கிரீட் போடுகின்-றனர். அப்போது, வாகனங்கள் வேறு வழியாக செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படு-கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்