உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெள்ளியணை அரசு பள்ளியில் எண்ணும் எழுத்தும் 100வது நிகழ்ச்சி

வெள்ளியணை அரசு பள்ளியில் எண்ணும் எழுத்தும் 100வது நிகழ்ச்சி

கரூர், கரூர் அருகேயுள்ள, வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் எண்ணும் எழுத்தும், 100வது நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். இப்பள்ளியில், 156 மாணவர்கள் படித்து வருகின்றனர். கொரோனா நேரத்தில், கற்றல் இடைவெளியை நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான, எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்பட்டு வருகிறது. செயல்பாடுகளின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் என்பது சிறப்பம்சமாகும். இதில், 2025--26ம் கல்வியாண்டின், 100வது எண்ணும் எழுத்தும்- நடத்தப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் வாசுகி, மனோகர், மகேஸ்வரி, வெங்கடேசன், சசிகலா ஆகியோர் மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளில் பயிற்சி அளித்தனர். ஒரு மாணவர் ஒரு செயல்பாடு என்ற அடிப்படையில், 100 மாணவர்கள், 100 செயல்பாடுகளை தனியாகவும், குழுவாகவும் செய்து காண்பித்த னர். தமிழ், ஆங்கிலம் வாசித்தல், கணித அடிப்படை செயல்பாடுகளை செய்தல், பழக்கலவை செய்தல், 100 வகை எமோஜி ஓவியங்கள் உருவாக்குதல், சமையலுக்கு தேவையான மளிகை பொருள்களை வகைப்படுத்துதல்.பந்து விளையாட்டு, ஆங்கிலம் உச்சரிப்பை சரியாக செய்தல், மைக்ரோசாப்ட் ரீடிங் கோச் என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வழியாக ஆங்கிலம் வாசித்தல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு, பாராட்டு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டன. 100 நாள்கள் விடுப்பு எடுக்காமல் வருகை புரிந்த மாணவர்களுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ