உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்கரூர், அக். 24-தமிழ்நாடு, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் லிங்கேஷ்வரன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், 2023-04ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், சட்டப்படியான வார விடுமுறை வழங்க வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்ற வகையில், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் வரதராஜ், செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் ராஜேந்திரன், சாமிவேல், ஜெகதீசன், ரேவதி, வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை