மேலும் செய்திகள்
பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் வழிபாடு
14-Nov-2024
வஞ்சுலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழாகரூர், நவ. 19-கார்த்திகை மாத திங்கட்கிழமை சோமவாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாத முதல் சோமவாரமான நேற்று, கரூர் விசாலாட்சி அம்பிகா சமேத வஞ்சுலீஸ்வரர் கோவிலில், சங்காபிஷேகம் நடந்தது. 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, பின் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது, பின், தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.* குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோம வாரம் நிகழ்ச்சி நடந்தது. குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்கள் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட தானியங்களை கொண்டு வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.தற்போது ரோப் கார் (கம்பி வடஊர்தி) செயல்படுவதால், அதிகளவு பக்தர்கள் படியில் பயணம் செய்வதை தவிர்த்து, ரோப்காரில் பயணம் செய்து, மலை உச்சியில் உள்ள ரத்தினகிரீஸ்வரை வணங்கினர்.
14-Nov-2024