உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிளஸ் 2 தேர்வில் கரூர் மாவட்டத்துக்கு 12 வது இடம்:41 பள்ளிகள் 100 சதவீதம்

பிளஸ் 2 தேர்வில் கரூர் மாவட்டத்துக்கு 12 வது இடம்:41 பள்ளிகள் 100 சதவீதம்

கரூர் : கரூர் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில், 12 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில், கரூர் மாவட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சியில், 12 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்தாண்டு, 17 வது இடத்தில் இருந்தது. 104 பள்ளிகளில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், 90.31 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள், 98.68 சதவீதமும், பகுதி உதவி பெறும் பள்ளிகள், 96.28 சதவீதமும், தனியார் பள்ளிகள், 99.73 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.கரூர் மாவட்டத்தில் உள்ள, 104 மேல்நிலைப் பள்ளிகளில், 41 பள்ளி மாணவ, மாணவிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், எட்டு அரசு பள்ளிகளும், மூன்று அரசு உதவி பெறும் பள்ளிகளும், 30 தனியார் பள்ளிகளும் அடங்கும். கடந்தாண்டு கரூர் மாவட்டம், 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். நடப்பாண்டு தேர்ச்சி விகிதம், 95.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்