குளித்தலை: குளித்தலை நகராட்சியில், 1.44 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிதாக கட்டப்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்து வைத்தார்.குளித்தலை நகராட்சி தற்காலிக பஸ் ஸ்டாண்டில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 74 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட பணி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 10 லட்சம் ரூபாயில் பயணியர் நிழற்கூடம், 'அம்ருத் 2.0' திட்டத்தில், குளித்தலை அண்ணா நகரில் புதிதாக கட்டப்பட்ட சிறுவர் பூங்கா, காவிரி நகரில், நகராட்சி பொது நிதி, 5.95 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட சிறுவர் பூங்கா, நகராட்சி கல்வி நிதி திட்டத்தில், மாரியம்மன் கோவில் நடுநிலை பள்ளியில், 20 லட்சம் ரூபாயில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது. நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார் எம்.எல்.ஏ., மாணிக்கம், பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.நகராட்சி துணைத்தலைவர் கணேசன், மாவட்ட பஞ்., குழு துணைத்தலைவர் தேன்மொழி, தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்தி சசிகுமார், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் குளித்தலை தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு கதிரவன், தெற்கு கரிகாலன், அரசு வக்கீல் சாகுல் ஹமீது, பொறியாளர் கார்த்திக், நங்கவரம் நகர செயலாளர் முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.