உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 2 பேர் மாயம்; போலீசார் விசாரணை

2 பேர் மாயம்; போலீசார் விசாரணை

குளித்தலை: குளித்தலை அடுத்த கல்லடை பஞ்., டி.இடையபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தம், 40; கூலித்தொழிலாளி. இவரது மகள் பெரியக்காள், 19. மணப்பாறை ஸ்பின்னிங் மில்லில் வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 14ல் ஸ்பின்னிங் மில்லுக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது தாய் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.* குளித்தலை அடுத்த மகாதானபுரம் பஞ்., தீர்த்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுலக்சனா, 39; கூலித்தொழிலாளி. இவரது மகள் யுவஸ்ரீ, 21. கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த, 17 காலை வீட்டிலிருந்து வேலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. எங்கு தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மகளை காணவில்லை என தாய் கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை